/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாணவர்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்மாணவர்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்
மாணவர்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்
மாணவர்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்
மாணவர்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்
ADDED : செப் 10, 2011 03:40 AM
ஓசூர் ''மாணவர்கள் புதிய சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்த வேண்டும், '' என அகில இந்திய தொழில்நுட்ப சங்க தலைவர் டாக்டர் ஷெட்டி தெரிவித்தார்.ஓசூர் எம்.ஜி.ஆர்., நகர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரியில் அகில இந்திய தொழில் நுட்ப சங்கம் சார்பில் இரு நாள் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
இந்திய தொழில்நுட்ப சங்க தலைவர் டாக்டர் ஷெட்டி கருத்தரங்கம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை வகித்தார். பேராசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் உலக சுற்றுப்புறம் மாசுபடுதல் குறித்தும், அவற்றால் வருங்கால மனித சமுதாயம், விலங்குகள் வாழ்வாதாரம் குறித்தும் தயாரித்த குறும்படத்தை வெளியிட்டனர். இந்திய தொழில்நுட்ப சங்க தலைவர் டாக்டர் ஷெட்டி பேசியதாவது:இந்தியர்கள் கடின உழைப்பாலும், தொடர் பயிற்சியாலும் உலக அளவில் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். கல்வி மூலம் இந்திய மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்பங்களையும் அறிந்து பல்வேறு துறைகளில் சாதனைக படைத்து வருகின்றனர்.குறிப்பாக இந்திய தொழி நுட்ப சங்கம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கருத்தரங்கம் நடத்தி சிறந்த பயிற்சி அளிக்கிறது. இந்த கருத்தரங்கில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய புதிய சிந்தனைககளையும், கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்த வேண்டும்.நாட்டின் எதிர்காலம் இளம் இன்ஜினியர்கள் கையில் உள்ளது. இன்றைய தினத்தில் 25 சதவீதம் இன்ஜினியர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இன்ஜினியரிங் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருந்தாலும் திறமையான இன்ஜினியர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிகைட்கிறது.மாணவர்கள் வெறும் பாடத்தை மட்டும் படிக்காமல் பல்வேறு சிறப்பு தகுதிகளையும் வளர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்களும், கருத்தரங்கம், போட்டிகள் மூலம் தங்களிடம் மறைந்து கிடக்கும் புதிதாக கண்டுபிடிக்கும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.இந்திய கல்விமுறை மிகவும் பின்தங்கிய நிலை காணப்படுகிறது. இவற்றை களைந்து புதிய பாடத்திட்டங்களையும், பயிற்சி முறைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். மாணவர்கள் முதல் தரமான இன்ஜினியர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் விளங்க கருத்தரங்கம், விவாதங்களில் ஆர்வமாக பங்கேற்க வேண்டும்.மாணவர்கள் திறமையை இந்திய தொழில்நுட்ப சங்கம் கருத்தரங்கம் மூலம் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆசிரியர்களுக்கும், புதிய தொழில்நுட்ப முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த பல்வேறு பயிற்சி முறைகள், கருத்தரங்களும் நடத்தப்படுகிறது. அதனால், மாணவர்கள் இதுபோன்ற கருத்தரங்கங்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த இன்ஜினியர்களாக உருவாக வேண்டும். தொழிற்நுட்ப கல்வியின் நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.


