சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திஇ.கம்யூ.,செப்.,20ல் உண்ணாவிரதம்
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திஇ.கம்யூ.,செப்.,20ல் உண்ணாவிரதம்
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திஇ.கம்யூ.,செப்.,20ல் உண்ணாவிரதம்

திருநெல்வேலி:நல்லிணக்கத்தை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், வரும் 20ம் தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபட, இந்திய கம்யூ., முடிவெடுத்துள்ளது.அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆர்.நல்லகண்ணு, நெல்லையில் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலில், இந்திய கம்யூ., அ.தி.மு.க., உடன் கூட்டணியைத் தொடர்கிறது.
போலீசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்களில், போலீசார் முன்கூட்டியே திட்டமிட்டு நடந்திருக்க வேண்டும். ஜாதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, வரும் செப்., 20ல் தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில், இந்திய கம்யூ.,உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறது.நெல்லையில், மாநிலச் செயலர் தா.பாண்டியன், தென்காசி எம்.பி., லிங்கம் பங்கேற்கின்றனர். மதுரையில், நான் (ஆர்.நல்லகண்ணு) தலைமை வகிக்கிறேன்.கூடங்குளம் அணு உலையைக் கண்டித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.


