Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இடநெருக்கடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்

இடநெருக்கடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்

இடநெருக்கடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்

இடநெருக்கடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்

ADDED : செப் 15, 2011 11:31 PM


Google News
துடியலூர்:கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இட நெருக்கடியால் பதிவு செய்ய வருபவர்கள் தரையில் அமரும் அவலம் நீடிக்கிறது.கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசினர் ஆண்கள் தொழிற்பயிற்சி நிறுவன வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு பொதுவான கல்வி தகுதி பெற்றவர்களுக்கும், தொழில்நுட்ப தகுதி பெற்றவர்களுக்கும் என தனித்தனி வேலைவாய்ப்பு அலுவலகமும், ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான பயிற்றுவித்தல் மற்றும் வழிகாட்டு மையமும் இயங்குகின்றன.இது தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு திருவிழா நடக்கிறது. இதில், வேலை தேடுவோரும், வேலைவாய்ப்பு வழங்குவோரும் நேரிடையாக சந்திக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் வேலைவாய்ப்பு பெறுவோரின் பதிவு மூப்பு, அரசு வேலை பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், இம்முகாமில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும் நேரிடையாக வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு விசாரணைக்களுக்காக தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து சென்றாலும் அவர்கள் காத்திருந்து பதிவு செய்ய போதிய இடவசதி இல்லை. இது குறித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தினர் கூறியதாவது:தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள இடவசதி போதாது. கூட்டம் வந்தால் சமாளிக்கவே முடியாது. தனியார் வேலைவாய்ப்பு திருவிழாவின் போது ஆண்கள், பெண்கள் உள்ளே வரும் போதும், திரும்பி செல்லும் போதும் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது தரை தளம், முதல் தளம் மட்டும் உள்ளது. இரண்டாம் தளத்தில் அறைகள் எழுப்பினால் இட நெருக்கடியை ஓரளவு சமாளிக்கலாம். பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் நபர்களை ஒரே இடத்தில் அமர்த்தி அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க பெரிய ஹால் போன்ற பகுதி இருப்பது அவசியம், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us