ADDED : செப் 15, 2011 11:51 PM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்து வயது சிறுமி ஒருவர் கட்டட தொழிலாளியால் பாலியல் பலாத்கார முயற்சிக்கு ஆளானார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவில்பட்டி மா.கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஊர்த் தலைவர்கள் ஸ்டாலின் காலனி சங்கரலிங்கம், அண்ணாநகர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதுடன் மா.கம்யூ.,நகரச் செயலாளர் சீனிவாசன், நகராட்சி சேர்மன் மல்லிகா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் ஜோதிபாசு, முத்துலட்சுமி, ஆதிதமிழர் பேரவை முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


