/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : செப் 16, 2011 12:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 88 பயனாளிகளுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., பிரகாசம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., பிரகாசம் தலைமை வகித்தார். ஓசூர் சப்-கலெக்டர் சந்திப் நந்தூரி முன்னிலை வகித்தார். தனித்துணை கலெக்டர் ட்யூக்பொன்ராஜ் வரவேற்றார். முகாமில், 14 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையும், 35 பேருக்கு விதவை உதவித்தொகையும், 20 பேருக்கு ஆதரவற்ற விவசாய கூலி உதவித்தொகையும், 3 பேருக்கு மாற்றுதிறனாளிகள் உதவித்தொகையும், ஐந்து பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா, 6 பேருக்கு வேளாண் துறை சார்பில் உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 88 பயனாளிகளுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., பிரகாசம் வழங்கினார். உதவி ஆணையர் (கலால்) கஸ்தூரி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் வீரபத்திரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் சீனிவாசன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் ஜெயராமன், ஓசூர் தாசில்தார் லட்சுமிநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


