ஆசிரியர் பணி இட மாறுதல் கலந்தாய்வு
ஆசிரியர் பணி இட மாறுதல் கலந்தாய்வு
ஆசிரியர் பணி இட மாறுதல் கலந்தாய்வு
ADDED : செப் 16, 2011 12:28 AM
தர்மபுரி: தர்மபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி இட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடக்கிறது.
முதன்மை கல்வி அலுவலர் இளங்கோ வெளியிட்ட அறிக்கை: அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் முதுகலை, பட்டதாரி, தமிழாசிரியர், ஆசிரியர் மற்றும் பயிற்றுனர், இடைநிலை, சிறப்பாசிரியர், ஆசிரியைகளுக்கான கலந்தாய்வு மாறுதல் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் இரு நாட்கள் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கிறது. வரும் 19ம் தேதி முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை õசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்கு மாறுதல்), 20ம் தேதி முதுகலை ஆசிரியர்கள், பட்டதாசரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஆகியோருக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


