/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்டத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழாமாவட்டத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
மாவட்டத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
மாவட்டத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
மாவட்டத்தில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா
ADDED : செப் 16, 2011 12:50 AM
விழுப்புரம்:முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாவட்டத்தின்
பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.விழுப்புரம் நகர தி.மு.க.,
அலுவலகத்தில் அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ், நகர செயலாளர் பாலாஜி, இளைஞரணி துணை அமைப்பாளர்
செல்வராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கோலியனூர் ஒன்றியம்
கொண்டங்கி கிராமத்தில் அ.தி. மு.க., சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
இலவச நோட்டு, பேனா வழங்கப்பட்டது. இவற்றை அ.தி.மு.க., ஜெ.,பேரவை செயலாளர்
ரமேஷ் வழங்கினார். தலைமை ஆசிரியர் அஞ்சலி தேவி, வி.ஏ.ஓ., அருணாச்சலம்
உடனிருந்தனர்.விக்கிரவாண்டியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., நகர
செயலாளர் நைனாமுகமது தலைமையில் மாலை அணி
வித்தனர்.திண்டிவனத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு அ.தி.மு.க., நகர செயலாளர்
வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். இதேபோல் தி.மு.க., சார்பில்
அண்ணாதுரை படத்திற்கு நகர செயலாளர் கபிலன் தலைமையில் மாலை
அணிவித்தனர்.செஞ்சி கூட்ரோட்டில் அண்ணாதுரை படத்திற்கு தி.மு.க., ஒன்றிய
செயலாளர் விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்தனர்.
நகர செயலாளர் காஜா நஜீர்
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அண்ணாதுரை
சிலைக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் மாலை
அணிவித்தனர். தே.மு.தி.க., சார்பில் நகர செயலாளர் அசேன்ஷரீப் தலைமையில்
மாலை அணிவித்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு
தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, நகர செயலாளர் குமார் மற்றும்
நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.சங்கராபுரத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு
தி.மு.க., நகர செயலாளர் முனுசாமி, முன்னாள் பேருராட்சி தலைவர் ஆசிம், தலைமை
செயற்குழு உறுப்பினர் தயாளமூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.


