Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/தலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

தலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

தலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

தலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு

ADDED : செப் 16, 2011 01:28 AM


Google News

மதுரை : அரசு அலுவலகங்களில் தேச தலைவர்கள் படங்களை வைக்காதது குறித்து, தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிக்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் அவமதிப்பு வழக்கு தாக்கலானது.

மதுரை மாவட்டம் எட்டிமங்கலம் வக்கீல் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு: அரசு அலுவலகங்கள், அரசு கட்டடங்களில் தேச தலைவர்கள் படங்களை வைக்க கோரி தலைமை செயலாளர், பொது துறை செயலாளர்களிடம் மனு கொடுத்தேன். பின், நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தேன். ஐகோர்ட் கிளை முதல் பெஞ்ச், மனுவை பரிசீலித்து நான்கு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. நான்கு மாதங்கள் கடந்த பின்னும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தலைமை செயலாளர், பொதுத்துறை செயலாளர்கள் மீது அவமதிப்பு செய்ததாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு இன்று நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us