27 வார்டுகளுக்கு 7 பேர் மட்டும் விருப்ப மனு
27 வார்டுகளுக்கு 7 பேர் மட்டும் விருப்ப மனு
27 வார்டுகளுக்கு 7 பேர் மட்டும் விருப்ப மனு
ADDED : செப் 25, 2011 03:43 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்ற வடக்கு மாவட்ட காங்., நிர்வாகிகள், மேலூர் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளுக்கு 7 பேர் மட்டும் மனு செய்ததால் அதிர்ந்தனர்.
வடக்கு மாவட்ட காங்., சார்பில் விருப்ப மனுக்களை தலைவர் செல்வராஜ் பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் பி.முத்துப்பாண்டி ஆகியோர் மதுரையில் பெற்றனர். அவர்களிடம் மேலூர் நகராட்சி தலைவருக்கு அங்கமுத்து என்பவரும், 27 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் மட்டும் மனு செய்தனர். மேலூர் சட்டசபை தொகுதியில் ஏற்கனவே காங்., சார்ந்த ராஜமாணிக்கம், அவரது தந்தை வீரணன் ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களாக பல முறை இருந்துள்ளனர். ராஜமாணிக்கம் மனைவி ராணியை கூட, காங்., ஓட்டுக்களை மனதில் வைத்து தி.மு.க.,வும் தங்கள் கட்சியில் இணைத்து கொண்டு, கடந்த சட்டசபை தேர்தலில் சீட் வழங்கியது. முன்னாள் அமைச்சர் கக்கனின் சொந்த ஊர் தும்பைப்பட்டி மேலூர் அருகேவுள்ளது. காங்கிரசுக்கு ஓரளவு செல்வாக்குள்ள மேலூரில் போட்டியிட கூட குறைந்த நிர்வாகிகள் மனு செய்தது நிர்வாகிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


