எய்ட்ஸ் நிதிஒதுக்கீட்டில் முறைகேடு : மாவட்ட அதிகாரி பணிநீக்கம்
எய்ட்ஸ் நிதிஒதுக்கீட்டில் முறைகேடு : மாவட்ட அதிகாரி பணிநீக்கம்
எய்ட்ஸ் நிதிஒதுக்கீட்டில் முறைகேடு : மாவட்ட அதிகாரி பணிநீக்கம்
ADDED : செப் 27, 2011 11:22 PM
மதுரை: எய்ட்ஸ் நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த, மதுரை மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் தங்கபாண்டியன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் மீது எழுந்த புகாரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசிங் ஞானதுரை விசாரித்தார். எய்ட்ஸ் பரிசோதனை முகாமில் 183 குழந்தைகளுக்கு, பெற்றோர் அனுமதியின்றி எய்ட்ஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 'பாசிட்டிவ்' ரிசல்ட் இருந்தவருக்கும் 'நெகட்டிவ்' என சான்று வழங்கியுள்ளார். எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக விளம்பரம், உணவு என செலவினங்களை தொண்டு நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்டு, அதற்கான தொகையை வழங்கவில்லை. பல நிறுவனங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல், கணக்கை முடித்துவிட்டார். அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் 'உதிரம்' என்ற அமைப்பை தொடங்கி, அதன் தலைவராகி, உறுப்பினர்களாக போலீஸ் துணைகமிஷனர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் என அரசு அதிகாரிகளை நியமித்துள்ளார். முறைகேடுகள் தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னை இயக்குனருக்கு கலெக்டர் சகாயம் பரிந்துரை அனுப்பினார். இதையடுத்து டாக்டர் தங்கபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.


