/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிளஸ் 2 தனித் தேர்வில் பிட்: 16 பேர் வெளியேற்றம்பிளஸ் 2 தனித் தேர்வில் பிட்: 16 பேர் வெளியேற்றம்
பிளஸ் 2 தனித் தேர்வில் பிட்: 16 பேர் வெளியேற்றம்
பிளஸ் 2 தனித் தேர்வில் பிட்: 16 பேர் வெளியேற்றம்
பிளஸ் 2 தனித் தேர்வில் பிட்: 16 பேர் வெளியேற்றம்
ADDED : செப் 27, 2011 11:26 PM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த பிளஸ் 2 தனித்தேர்வு மையங்களை சி.இ.ஓ., திடீர் ஆய்வு செய்த போது பிட் அடித்து பிடிபட்ட 16 பேர் வெளியேற்றப்பட்டனர்.விருத்தாசலத்தில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளி மையங்களில் பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.இதில் 10ம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்து விட்டு ஆசிரியர்களான பலர், பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக பிளஸ் 2 தேர்வு எழுதி வருகின்றனர்.கடந்த 21ம் தேதி டேனிஷ் மிஷன் பள்ளியில் தமிழ் முதல் தாள் தேர்வு எழுதிய இரண்டு தலைமை ஆசிரியர்கள், ஐந்து மாணவர்கள் உட்பட ஏழு பேரை பிட் அடித்ததாக பறக்கும் படையினர் பிடித்தனர்.இந்நிலையில் நேற்று வேதியியல் மற்றும் பொருளியியல் தேர்வு நடந்தது.
இத்தேர்வின் போது விருத்தாசலம் தேர்வு மையங்களை சி.இ.ஓ., அமுதவல்லி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 7 மாணவர்கள், டேனிஷ் மிஷன் பள்ளியில் தேர்வு எழுதிய 9 மாணவர்கள் பிடிபட்டனர்.உடன் அவர்களிடம் இருந்த விடைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.கருவேப்பிலங்குறிச்சி: கருவேப்பிலங்குறிச்சி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தனித்தேர்வு நடந்து வருகிறது. இதில் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் பிட் அடித்த 3 பேரை பறக்கும் படையினர் வெளியேற்றினர்.


