Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வருமான சான்று தரமறுக்கும் அதிகாரிகள்

வருமான சான்று தரமறுக்கும் அதிகாரிகள்

வருமான சான்று தரமறுக்கும் அதிகாரிகள்

வருமான சான்று தரமறுக்கும் அதிகாரிகள்

ADDED : செப் 28, 2011 11:50 PM


Google News

ராமநாதபுரம் : கிராம கோயில் பூஜாரிகளுக்கு, ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் 12 ஆயிரம் வருமான சான்று கோரப்படுகிறது.

இதை வருவாய் துறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர், என்று கிராம கோயில் பூசாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். கிராம கோயில் பூஜாரிகள் மாவட்ட அமைப்பாளர் கோதாவரி ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லாவிடம் அளித்த மனு: கிராம கோயில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் நான்கு மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இதை இடை தரகர் மூலம், எந்த பாதிப்பும் இல்லாமல் மாதந்தோறும் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் 12 ஆயிரம் ரூபாய்க்கு வருமான சான்று கேட்கப்பட்டுள்ளது. அதை வருவாய் துறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர். ஆகையால் சான்றிதழ் வரம்பை 24 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட வேண்டும். கோயில் பூசாரிகளுக்கும் இலவச கறவை மாடுகள் வழங்க வேண்டும், என கோரியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us