/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பேப்பர் மில் ரயில்வே பாலம் மராமத்துபஸ் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர்பேப்பர் மில் ரயில்வே பாலம் மராமத்துபஸ் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர்
பேப்பர் மில் ரயில்வே பாலம் மராமத்துபஸ் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர்
பேப்பர் மில் ரயில்வே பாலம் மராமத்துபஸ் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர்
பேப்பர் மில் ரயில்வே பாலம் மராமத்துபஸ் போக்குவரத்து மாற்றம்: கலெக்டர்
ADDED : செப் 29, 2011 12:52 AM
நாமக்கல்: 'பள்ளிபாளையம் பேப்பர் மில் காலனி ரயில்வே பாலம் பராமரிப்பு பணி
காரணமாக, திருச்செங்கோடு-ஈரோடு பஸ் போக்குவரத்தில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன்
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்செங்கோடு
தாலுகா, பள்ளிபாளையம் பேப்பர் மில் காலனி அருகே உள்ள ரயில்வே பாலத்தில்,
பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால், அக்டோபர் 1ம் தேதி முதல் 15
தினங்களுக்கு, அனைத்து வாகனப் போக்குவரத்திலும் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.திருச்செங்கோடு வழியாக, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு
செல்லும் அனைத்து வாகனங்களும், பள்ளிபாளையம் பேப்பர் மில் காலனியிலிருந்து,
தாஜ்நகர், பேப்பர்மில், காவேரிபாலம் வழியாக பள்ளிபாளையம் செல்ல
வேண்டும்.
ஈரோட்டிலிருந்து, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்
அனைத்து வாகனங்களும், பள்ளிபாளையத்திலிருந்து காவேரிப் பாலம், பேப்பர்
மில், தாஜ்நகர் மற்றும் பேப்பர் மில் காலனி வழியாக செல்லவும். ரயில்வே
பாலம் மராமத்து பணிகள் காரணமாக, இம்மாற்றுப் பாதை தற்காலிகமானதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


