ADDED : செப் 30, 2011 01:49 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கான புதிய கலெக்டர் வி.கே.சண்முகம் இன்று
பொறுப்பேற்கிறார்.ஈரோடு கலெக்டர் காமராஜ், திடீரென மாற்றப்பட்டு
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக
வணிகவரித்துறை இணை ஆணையர் வி.கே.சண்முகம், ஈரோடு கலெக்டராக
மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை இதற்கான அறிவிப்பு வெளியானதும், ஈரோடு கலெக்டர்
காமராஜ், முடிக்க வேண்டிய தனது பணிகளை முகாம் அலுவலகத்தில் இருந்து
கவனித்து வருகிறார். நேற்று முழுமையாக முகாம் அலுவலகத்தில் இருந்தபடி
பணிகளை கவனித்தார்.இன்று காலை, ஈரோடு டி.ஆர்.ஓ., கார்த்திகாவிடம் தனது
பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு, கலெக்டர் காமராஜ் தன்னை விடுவித்துக்
கொள்கிறார். இன்று காலை புதிய கலெக்டர் வி.கே.சண்முகம், டி.ஆர்.ஓ.,
கார்த்திகாவிடம் இருந்து பொறுப்புக்களை ஏற்கிறார்.