/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாக்காளர் பட்டியலில் 250 பெயர்களை காணவில்லை: அ.தி.மு.க., வினர் புகார்வாக்காளர் பட்டியலில் 250 பெயர்களை காணவில்லை: அ.தி.மு.க., வினர் புகார்
வாக்காளர் பட்டியலில் 250 பெயர்களை காணவில்லை: அ.தி.மு.க., வினர் புகார்
வாக்காளர் பட்டியலில் 250 பெயர்களை காணவில்லை: அ.தி.மு.க., வினர் புகார்
வாக்காளர் பட்டியலில் 250 பெயர்களை காணவில்லை: அ.தி.மு.க., வினர் புகார்
ADDED : செப் 30, 2011 01:49 AM
கடலூர் : கடலூர் முதுநகர் வசந்தராயன்பாளையம், சலங்கைக்கார நகர் பகுதியில்
இருந்த 250 ஓட்டுக்களை காணவில்லை என அ.தி.முக., வினர் கமிஷனரிடம் புகார்
தெரிவித்துள்ளனர்.
கடலூர் முதுநகர் அடுத்த 33வது வார்டை சேர்ந்தவர்
கணேசன். இவர் அ.தி.மு.க. சார்பில் 33 வது வார்டில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் 33 வது வார்டில் உள்ள 250க்கும் மேற்பட்ட ஓட்டுகள்
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இல்லை. அதே சமயம் 32 வது
வார்டு ஆலை காலனியை சேர்ந்த 309 ஓட்டுகள் 33 வது வார்டில் இடம்
பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடியை நீக்கி 33
வார்டில் உள்ள அனைவருக்கும் வாக்காளர் பட்டியலை தயாரித்து வழங்க வேண்டும்
என 33 வது வார்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., வினர் கமிஷனர்
இளங்கோவனை சந்தித்து புகார் செய்தனர். இதற்கு பதிலளித்த கமிஷனர் உடன்
அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து சரி செய்வதாக உறுதியளித்துள்ளார்.இதே
போன்று கடலூர் நகராட்சியில் உள்ள சில வார்டுகளில் குளறுபடிகள் உள்ளது என
அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.


