Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆதிதிராவிடர் மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் நிறுத்தம்

ஆதிதிராவிடர் மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் நிறுத்தம்

ஆதிதிராவிடர் மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் நிறுத்தம்

ஆதிதிராவிடர் மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் நிறுத்தம்

ADDED : அக் 03, 2011 10:56 PM


Google News

விருதுநகர் : ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்காததால், வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, பள்ளி நேரம் தவிர்த்து காலை, மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆசிரியருக்கு மாதம் ரூ.100 சம்பளமாக வழங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை. பின் தங்கிய நிலையில் உள்ள இவர்களை, முன்னுக்கு கொண்டு வருவதற்காக, நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை கண்காணித்து, முறையாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us