/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : அக் 04, 2011 01:07 AM
சேலம்: ஆயுதபூஜையை முன்னிட்டு, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்
இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள
அறிக்கை: *கோவை-சென்னை சென்ட்ரல் வழியாக (வண்டி எண் 06624) கோவை அதிவிரைவு
எக்ஸ்பிரஸ் அக்டோபர் 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படுகிறது. கோவையில்
இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு வழியாக
சேலத்துக்கு இரவு 1.20 மணிக்கு வருகிறது. ஜோலார்பேட்டை, காட்பாடி,
அரக்கோணம், பெரம்பூர் வழியாக காலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரல்
சென்றடைகிறது. *கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ்(வண்டி எண் 06623) அக்டோபர் 5, 6
ஆகிய இரண்டு நாட்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30
மணிக்கு புறப்பட்டு, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்÷ப்டடை வழியாக
இரவு 3.10 மணிக்கு சேலம் வந்தடைகிறது. ஈ÷õடு, திருப்பூர் வழியாக காலை 6.45
மணிக்கு கோவை சென்றடைகிறது. *சென்னை சென்ட்ரல்- மங்களூர் சென்ட்ரல்(வண்டி
எண் 06087) அக்டோபர் 5, 6ம் தேதிகளில் இரவு 8.45 மணிக்கு, சென்னை சென்ட்ரல்
ரயில் நிலையத்தில் புறப்படுகிறது. பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி,
ஜோலார்பேட்டை வழியாக இரவு 1.15 மணிக்கு சேலம் வந்தடைகிறது. ஈரோடு, கோவை,
போத்தனூர், பாலக்காடு, சொர்ணூர், குட்டிப்பரம், திரூர், வடக்கரை, கண்ணூர்
வழியாக வழியாக பகல் 1 மணிக்கு மங்களூர் சென்ட்ரல் சென்றடைகிறது.
*மங்களூர்சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல்( வண்டி எண் 06088) அக்டோபர் 7 ம்
தேதி, இரவு 8.30 மணிக்கு மங்களூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து
புறப்பட்டு, கண்ணூர், வடகரை, திரூர், குட்டிபுரம், பாலக்காடு காலை 7.25
மணிக்கு சேலம் வந்தடைகிறது. ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக,
மதியம் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது.


