/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அச்சு துறை தொழில் நுட்ப கருத்தரங்குஅச்சு துறை தொழில் நுட்ப கருத்தரங்கு
அச்சு துறை தொழில் நுட்ப கருத்தரங்கு
அச்சு துறை தொழில் நுட்ப கருத்தரங்கு
அச்சு துறை தொழில் நுட்ப கருத்தரங்கு
ADDED : அக் 04, 2011 10:48 PM
சிவகாசி:சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில், அச்சுதுறையில்
நவீன தொழில் நுட்ப வளர்ச்சி பற்றி, துறை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள்
கருத்தரங்கு நடந்தது.
துணை முதல்வர் நந்தகுமார் தலைமை வகித்தார். முதல்வர்
பாலசுப்பிரமணியன், தாளாளர் அசோகன் முன்னிலை வகித்தனர். சிவகாசி ஜே.சி.கிளப்
தலைவர் அருண் தொடங்கி வைத்தார்.அச்சக உரிமையாளர் மணிவண்ணன் பேசினர். 2ம்
நாள் கருத்தரங்கில் அச்சு துறை ஆசிரியர்களை, சிவகாசியில் உள்ள பல்வேறு
அச்சகங்கள் சென்று, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பார்வையிட்டனர்.
சிவகாசி பிரிண்டிங் இன்ஸ்டியூட் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்வி
அதிகாரி பரமசிவம் செய்திருந்தார்.


