/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/"வாழ்க்கையே தண்டனை'தோல் ஆலைகளால் துயரம்"வாழ்க்கையே தண்டனை'தோல் ஆலைகளால் துயரம்
"வாழ்க்கையே தண்டனை'தோல் ஆலைகளால் துயரம்
"வாழ்க்கையே தண்டனை'தோல் ஆலைகளால் துயரம்
"வாழ்க்கையே தண்டனை'தோல் ஆலைகளால் துயரம்
ADDED : அக் 04, 2011 11:38 PM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தோல் கழிவு நீரால் வாழ்வாதாரம் குன்றி, மக்கள்
பரிதவிக்கின்றனர். திண்டுக்கல் நகரை சுற்றி முன்பு, 124 தோல் ஆலைகள்
இருந்தன. தற்போது 54 ஆக குறைந்துள்ளது. இந்த ஆலைகளின் கழிவு நீரால்,
பொன்மான்துரை, புதுப்பட்டி, ராமையன்பட்டி, தாமரைக்குளம், கொட்டப்பட்டியில்
விவசாய நிலங்கள் விஷமாயின. நிலத்தடி நீர், கழிவுகளின் சங்கமம் ஆனது. மக்கள்
குடிநீர் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். சுத்திகரிப்பு நிலையம் இருந்தும்
பல ஆலைகள், பயன்படுத்துவதில்லை என, அப்பகுதியினர் புகார் பட்டியல்
வாசிக்கின்றனர். பொன்மான்துரை, புதுப்பட்டி பகுதியினரின்
மனக்குமுறல்:ஓந்தையம்மாள்: இரண்டு ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது.
இன்னும் நிவாராணம் கிடைக்கவில்லை. அதிகாரிகள் பலமுறை கூட்டம்
நடத்துகின்றனர். ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
சின்னத்துரை: இங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. பல ஆலைகள்
கழிவுநீரை சுத்திகரிப்பதில்லை. மழை பெய்யும் போது வயல் வெளிகளில் திறந்து
விடுகின்றனர். நீரை குடிக்கும் கால்நடைகள் பலியாகின்றன. எங்களது 10 ஏக்கர்
நிலம் கழிவுநீரால் பாதிக்கப்பட்டுள்ளது.லட்சுமி: தோட்டம், வயல்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. குடிநீருக்காக, நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த
ஊரில் வசிப்பதை தண்டனையாக நினைக்கிறோம்.கருப்பாயி: கழிவு நீரால் தோல் நோய்
ஏற்பட்டு அவதிப்படுகிறேன். குடிநீர் கெட்டு விட்டது. நாங்கள் வசதி
வாய்ப்பு கேட்கவில்லை. நல்ல குடிநீர் வேண்டும். குடிநீருக்காக
அலையவேண்டியுள்ளது.


