/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/காவேரிபட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆறுமுனை போட்டிகாவேரிபட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆறுமுனை போட்டி
காவேரிபட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆறுமுனை போட்டி
காவேரிபட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆறுமுனை போட்டி
காவேரிபட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆறுமுனை போட்டி
ADDED : அக் 05, 2011 01:16 AM
காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆறுமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் தேர்தல் வரும் 17ம் தேதி நடக்கிறது. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 10 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இதில், 3 பேர் வாபஸ் பெற்றதையடுத்து ஏழு பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வருமாறு: வாசுதேவன் (அ.தி.மு.க.,), இளங்கோவன் (தி.மு.க.,), ஜாவித்கான் (காங்.,), ரமேஷ் (தே.மு.தி.க.,), ருத்ரன் (ம.தி.மு.க.,), சங்கர் (பா.ம.க.,) உள்ளிட்ட ஏழு பேர் போட்டியிடுகின்றனர். 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 79 பேர் மனு செய்தனர். இதில் 27 பேர் வாபஸ் பெற்றதையடுத்து 52 பேர் போட்டியிடுகின்றனர்.* காவேரிப்பட்டணம் யூனியனில் பண்ணந்துர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியின்றி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காவேரிப்பட்டணம் யூனியனில் உள்ள 36 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 281 பேர் மனு செய்தனர். இதில் 142 பேர் வாபஸ் பெற்றதையடுத்து 139 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பண்ணந்தூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு செந்தில்குமார் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்தம் 27 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 200 பேர் மனு செய்தனர். இதில் 67 பேர் வாபஸ் பெற்றனர். 133 பேர் போட்டியிடுகின்றனர். 3 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 25 பேர் மனு செய்தனர்.இதில், ஐந்து பேர் வாபஸ் பெற்றயதையடுத்து 20 பேர் போட்டியிடுகின்றனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 376 பேர் மனு செய்தனர். 324 பேர் வாபஸ் பெற்றனர். ஆயிரத்து 52 பேர் போட்டியிடுகின்றனர். 37 பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.* காரிமங்கலம் காரிமங்கலம் யூனியனில் உள்ள 30 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 199 பேர் மனு செய்தனர். இதில் 93 பேர் வாபஸ் பெற்றதையடுத்த 106 பேர் போட்டியிடுகின்றனர். 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 158 பேர் மனு செய்து, 68 பேர் வாபஸ் பெற்றனர். 90 பேர் போட்டியிடுகின்றனர்.
இரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 21 பேர் மனு செய்து, 9 பேர் வாபஸ் பெற்றதையடுத்து 12 பேர் போட்டியிடுகின்றனர். வார்டு உறுப்பினர் பதவிக்கு 87 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 563 பேர் போட்டியிடுகின்றனர்.


