Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/5 பவுன் செயின் திருடிய இரு வாலிபர்கள் "அரஸ்ட்'

5 பவுன் செயின் திருடிய இரு வாலிபர்கள் "அரஸ்ட்'

5 பவுன் செயின் திருடிய இரு வாலிபர்கள் "அரஸ்ட்'

5 பவுன் செயின் திருடிய இரு வாலிபர்கள் "அரஸ்ட்'

ADDED : அக் 06, 2011 03:22 AM


Google News
தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியம் யூனியன் உன்னியூர் கிராமத்தில் வசிப்பவர் ராஜலட்சுமி. இவருக்கு சொந்தமாக உன்னியூர் கிராமத்தில் வீடு உள்ளது. கடந்த மாதம் (12ம் தேதி) தேனி மாவட்டம் ஆவாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஷ்(33), வேலுசாமி மகன் விஜயகுமார்(23) ஆகியோர் தாங்கள் இப்பகுதியில் வியாபாரம் செய்ய இருப்பதாகவும், தங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ராஜலட்சுமியும் தனது வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார்.

சில நாட்கள் கழித்து சதீஷ், விஜயகுமார் தங்கள் வியாபாரம் செய்ய போதுமான பணம் இல்லை எனவும், அதனால் ரூபாய் ஆயிரம் கடனாக கொடுக்குமாறு ராஜலட்சுமியிடம் கேட்டுள்ளனர். இதற்கு ராஜலட்சுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கத்தியை காட்டி மிரட்டி ராஜலட்சுமியிடம் இருந்து ஐந்து பவுன் செயினை பிடுங்கி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜலட்சுமி போலீஸில் கொடுத்த புகாரின் பேரில், தொட்டியம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று போலீஸார் மோகனூர் ரவுண்டானா அருகே தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் தேனி மாவட்டம், ஆவாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஷ்(33), வேலுசாமி மகன் விஜயகுமார்(23) என்பதும், ராஜலட்சுமியிடம் செயின் பிடுங்கிச் சென்றதையும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us