Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி தேசியக்கல்லூரி மேம்பாடு யூ.ஜி.சி., ஒன்றரை கோடி நிதியுதவி

திருச்சி தேசியக்கல்லூரி மேம்பாடு யூ.ஜி.சி., ஒன்றரை கோடி நிதியுதவி

திருச்சி தேசியக்கல்லூரி மேம்பாடு யூ.ஜி.சி., ஒன்றரை கோடி நிதியுதவி

திருச்சி தேசியக்கல்லூரி மேம்பாடு யூ.ஜி.சி., ஒன்றரை கோடி நிதியுதவி

ADDED : அக் 06, 2011 03:22 AM


Google News
திருச்சி: இந்தியாவில் உள்ள கல்லூரிகளை, அவற்றின் ஆராய்ச்சிக்கட்டுரைகள், கற்பித்தல் மற்றும் கற்றல் திறன், உள்கட்டமைப்பு வசதி மற்றும் மாணவர் மேம்பாட்டுக்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் போன்ற விபரங்களை கொண்டு தர நிர்ணயம் செய்வது தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக்குழு ('நாக்' கமிட்டி).

பல்கலை மானியக்குழுவின் உதவி பெறவும், மாணவர்கள் கல்லூரியின் தரத்தை அறியவும், இத்தர நிர்ணயம் அவசியமானதாக உள்ளது. ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை தர மதிப்பீட்டை கல்லூரிகள் புதுப்பிக்க வேண்டும். திருச்சி தேசியக்கல்லூரியில், கடந்த ஜூலை மாதம் 'நாக்' கமிட்டி பார்வையிட்டது.

கல்லூரியில் ஆராய்ச்சிப்பணிகள் சிறப்பாக உள்ளதாகவும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டு, தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதையும் பாராட்டியுள்ளது.

மேலும், டில்லியில் இருக்கும் பல்கலை மானியக்குழு, தேசியக்கல்லூரிக்கு, 'மேன்மைத்திறன் பெற்ற கல்லூரி' என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

கல்லூரியின் ஆராய்ச்சி வசதி, புதிய ஆய்வகப்பொருட்கள் வாங்குதல், பயிற்றுவிக்கும் சாதனங்கள் மற்றும் கல்வி மேம்பாடு செலவுக்காக ஒன்றரை கோடி ரூபாய் நிதியை பல்கலை மானியக்குழு வழங்கியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us