/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தேர்தல் அலுவலர் பணி நியமனத்தில் குளறுபடிதேர்தல் அலுவலர் பணி நியமனத்தில் குளறுபடி
தேர்தல் அலுவலர் பணி நியமனத்தில் குளறுபடி
தேர்தல் அலுவலர் பணி நியமனத்தில் குளறுபடி
தேர்தல் அலுவலர் பணி நியமனத்தில் குளறுபடி
ADDED : அக் 07, 2011 02:06 AM
பேய்க்குளம் : உள்ளாட்சி தேர்தல் அலுவலர் நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளதாக பதவிக்கேற்ற நியமனம் வழங்க தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு யூனியனிலிருந்தும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் அலுவலர் நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ஆழ்வை யூனியனுக்குட்பட்ட ஆசிரியர்கள் புதுக்கோட்டை யூனியனில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைமையாசிரியர்களை வாக்குச்சாவடி அலுவலர்-4 மற்றும் 5 எனவும், இடைநிலை ஆசிரியர்களை வாக்குச்சாவடி அதிகாரிகளாகவும் நியமனம் செய்துள்ளனர். இந்த நியமனத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆழ்வை யூனியன் சார்பில் கண்டனம் தெரிவித்ததோடு நியமன குளறுபடியை நீக்கி பதவிக்கேற்ற நியமனம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


