/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வாரச்சந்தை அமைக்கப்படும் கோட்டூர் வேட்பாளர் உறுதிவாரச்சந்தை அமைக்கப்படும் கோட்டூர் வேட்பாளர் உறுதி
வாரச்சந்தை அமைக்கப்படும் கோட்டூர் வேட்பாளர் உறுதி
வாரச்சந்தை அமைக்கப்படும் கோட்டூர் வேட்பாளர் உறுதி
வாரச்சந்தை அமைக்கப்படும் கோட்டூர் வேட்பாளர் உறுதி
ADDED : அக் 07, 2011 10:22 PM
நிலக்கோட்டை : ''கோட்டூர் ஊராட்சியில் வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயராஜ் கூறினார்.தற்போது இவர், ஊரா ட்சி தலைவராக உள்ளார்.
நல்லாட்சி நாயகர், மக்கள் சேவா ரத்னா விருது பெற்றுள்ளார். ஊராட்சிக்கு செய்த, செய்யப்போகும் திட்டங்கள் குறித்து அவர் கூறியதாவது:மைக்கேல்பாளையம் ஆர்.சி., பள்ளியை தரம் உயர்த்த 10 லட்ச ரூபாய் நிதி பெற்றுக் கொடுத்தேன். ஊராட்சியில் 30 லட்ச ரூபாய் செலவில் ஐந்து புதிய ரோடுகள் அமைக்கப்பட்டு அனைத்து கிராமங்களும் இணைக்கப்பட்டன. கூடுதலாக 70 தெருவிளக்குகள், 12 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.
காணாமல் போன ஓடைகளை கண்டுபிடித்து தூர்வாரப்பட்டன. 40 கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது. மைக்கேல்பாளையம் தேரடி வீதிகளில் குறுக்கே செல்லும் மின் ஒயர்கள், குழாய்கள் மூலம் பூமிக்கடியில் பதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் காக்க 5000 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா, அரசின் பசுமைக்குடில் திட்டம் பெற்றுத்தரப்படும். மீண்டும், துணை கால்நடை பரமாரிப்பு நிலையம் அமைக்க முயற்சி எடுப்பேன். சங்கால்பட்டி, அவையம்பட்டியில் மேம்பாலம் அமைக்கப்படும். வாரச்சந்தை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும், என்றார்.


