Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வாக்காளர் பட்டியலில் தெருவையே காணோம்"சிட்டிசன்' சினிமா பாணியில் தேடும் மக்கள்

வாக்காளர் பட்டியலில் தெருவையே காணோம்"சிட்டிசன்' சினிமா பாணியில் தேடும் மக்கள்

வாக்காளர் பட்டியலில் தெருவையே காணோம்"சிட்டிசன்' சினிமா பாணியில் தேடும் மக்கள்

வாக்காளர் பட்டியலில் தெருவையே காணோம்"சிட்டிசன்' சினிமா பாணியில் தேடும் மக்கள்

ADDED : அக் 08, 2011 01:12 AM


Google News
சென்னை:'சிட்டிசன்' படத்தில், அத்திப்பட்டு என்ற கிராமமே காணாமல் போனது போல், வாக்காளர் பட்டியலில், ஒரு தெருவே காணாமல் போனதால், அப்பகுதி மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட, மண்ணடி வேலாயுதம் தெருவில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், இந்த தெருவை முற்றிலும் காணவில்லை. புதிய வார்டுப்படி, இந்த பகுதி 60வது வார்டில் வருகிறது.

கடந்த எம்.எல்.ஏ., தேர்தலின் போது வெளியான வாக்காளர் பட்டியலில், 450க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது, வெறும் 26 பெயர் மட்டுமே உள்ளது. மற்றவர்களின் பெயர்கள், ஒட்டு மொத்தமாக மாயமாகியுள்ளது.ம.தி.மு.க., வேட்பாளர் சீமா பஷீர் கூறும்போது, 'நான் போட்டியிடும்

60வது வார்டில் வேலாயுதம் தெரு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் 26 பெயர் மட்டுமே உள்ளது; 400க்கும் மேற்பட்டோரது பெயர்கள் விடுபட்டுள்ளன. இதுகுறித்து, தேர்தல் அதிகாரியிடம் முறையிட உள்ளோம்' என்றார்.அப்பகுதிவாசி மீரான் கூறும்போது, 'துறைமுகத்தில், வேலாயுதம் தெரு மாயமாகிவிட்டது. வாக்காளர் பட்டியலில், பெயரைத் தேடித் தேடி வெறுத்துப் போய் விட்டோம். பட்டியலில் பெயர்களை இணைத்து, ஓட்டுப் போடும் உரிமையைத் தர வேண்டும். இல்லாவிட்டால், மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை' என்றார்.இதுகுறித்து, தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இது பற்றி புகார் ஏதும் வரவில்லை. வந்தால், அது பற்றி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, உரிய தீர்வு காண்போம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us