முதியவர் மீது தாக்குதல்எஸ்.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
முதியவர் மீது தாக்குதல்எஸ்.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
முதியவர் மீது தாக்குதல்எஸ்.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : அக் 08, 2011 10:11 PM

மதுரை:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேலாயூரில், முதியவர் தாக்கப்பட்ட வழக்கை எஸ்.பி., நேரடி கண்காணிப்பில் விசாரிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மேலாயூரை சேர்ந்த சாமிநாதன் தாக்கல் செய்த மனு: குடும்ப பிரச்னையில் ஜூலை 17ல் என்னை மனைவி செபஸ்தியம்மாள் உட்பட ஆறு பேர் தாக்கினர்.
இளையான்குடி போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. உயரதிகாரிகளிடம் புகார் செய்தேன். இந்நிலையில், போலீசார் என்னை மிரட்டி வேறு விதமாக புகார் எழுதி வாங்கினர். உள்ளூர் போலீசார் விசாரித்தால், நியாயம் கிடைக்காது. வேறு போலீஸ் விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் சி.எம்.ஆறுமுகம் ஆஜரானார்.நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ''மனுதாரர் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்க வேண்டும். அதை எஸ்.பி., நேரடியாக கண்காணிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.


