Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/டிரான்ஸ்பார்மரை பழுதாக்கிய 5 பேர் மீது வழக்கு

டிரான்ஸ்பார்மரை பழுதாக்கிய 5 பேர் மீது வழக்கு

டிரான்ஸ்பார்மரை பழுதாக்கிய 5 பேர் மீது வழக்கு

டிரான்ஸ்பார்மரை பழுதாக்கிய 5 பேர் மீது வழக்கு

ADDED : அக் 08, 2011 10:58 PM


Google News
அவிநாசி : சேவூர் அருகே டிரான்ஸ்பார்மரை பழுதாக்கிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, ஒட்டர்பாளையம் ஏ.டி.காலனியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.

கடந்த 5ம் தேதி அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால், ரங்கசாமி, வேலுசாமி உள்ளிட்ட ஐந்து பேர் டிரான்ஸ்பார்மரில் ஏறி 'பீஸ்' போட்டுள்ளனர். அப்போது பழுது ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர் செயலிழந்தது.இதையறிந்த மின் ஊழியர் முருகேசன் அங்கு சென்று கேட்ட போது, வேலுசாமி, ரங்கசாமி உட்பட 5 பேர் அவரிடம் தகராறு செய்தனர். டிரான்ஸ்பார்மரை பழுதாக்கி விட்டு, மின் ஊழியரையும் பணிசெய்ய விடாமல் தடுத்தனர்; வேலுசாமி, சேவூர் போலீசில் முருகேசன், அவரது உறவினர் அம்மாசைக்குட்டி ஆகியோர், தங்களை தாக்கியதாக கூறி புகார் செய்து விட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் 'அட்மிட்' ஆகினர்.இச்சம்பவம் குறித்து அவிநாசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பொன்மூர்த்தி ஒட்டர்பாளையம் சென்று நேரடி விசாரணை நடத்தினார். டிரான்ஸ்பார்மரை செயலிழக்கச் செய்ததுடன், மின் ஊழியரை பணியாற்ற விடாமல் கொலை மிரட்டல் விடுத்த, வேலுசாமி உட்பட ஐந்து பேர் மீது, வடுகபாளையம் உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்தார். சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடுகின்றனர்.தலைமறைவாக உள்ள வேலுசாமி, புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, 6வது வார்டில் வேட்பாளராக போட்டியிட்டு, போட்டியின்றி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us