எம்ப்ளாயீஸ் யூனியன் வாயிற் கூட்டம்
எம்ப்ளாயீஸ் யூனியன் வாயிற் கூட்டம்
எம்ப்ளாயீஸ் யூனியன் வாயிற் கூட்டம்
ADDED : அக் 11, 2011 01:43 AM
தர்மபுரி : தர்மபுரியில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் தர்மபுரியில் நேற்று வாயிற்கூட்டம் நடந்தது.மண்டல தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார்.
செயலாளர் சண்முகராஜ் வரவேற்றார். பொருளாளர் காளியப்பன் கோரிக்கைகள் குறித்து பேசினார். 'சிவில் சப்ளைஸ் ஊழியர்களுக்கு அரசு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு முறைப்படி அழைப்பு மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட தொழிலாளர் பணியிட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வினை 2011 ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.துணை தலைவர்கள் துரைசாமி, பழனி, துணை செயலாளர்கள் ராஜேந்திரன், சிங்காரவேல், கண்ணம்மாள், அன்பழகன், ராமசாமி, வேடியப்பன், ரமேஷ், பிரகாஷ், தீர்த்தான், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


