காட்டுப்பகுதியில் பதுக்கப்பட்ட 500 மூட்டை உரம் பறிமுதல்
காட்டுப்பகுதியில் பதுக்கப்பட்ட 500 மூட்டை உரம் பறிமுதல்
காட்டுப்பகுதியில் பதுக்கப்பட்ட 500 மூட்டை உரம் பறிமுதல்
ADDED : அக் 11, 2011 11:28 PM
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே, வெளிநாட்டிலிருந்து வந்த, 500 மூட்டை உரத்தை கடத்தி, காட்டுப்பகுதியில் பதுக்கிய, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காட்டுப்பகுதியில், உரம் பதுக்கப்பட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் வந்தது.
நேற்று முன்தினம் இரவு, போலீசார் சோதனையிட்டனர். அங்கு பதுக்கப்பட்டிருந்த, தலா, 50 கிலோ எடை கொண்ட, 500 மூட்டை பொட்டாஷ் உரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, முருகன், ரத்தினராஜ், சரவணன், இசக்கி, வெள்ளத்துரை, மற்றொரு இசக்கி, சுப்பையா ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில், வெளிநாட்டிலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு கப்பலில் வந்த ஒரு கம்பெனிக்கு சொந்தமான இந்த உர மூட்டையை, அங்கிருந்து லாரியில் கடத்தி காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்து, அவற்றை வேறு மூட்டைகளில் மாற்றி, கள்ள மார்க்கெட்டில் இவர்கள் விற்க இருந்தது தெரிந்தது.அங்கிருந்த லாரி, மாருதி வேன், இருசக்கர வாகனம், ஜெனரேட்டர், எடை மிஷன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கில், முக்கிய புள்ளியான கண்ணனை, ஏரல் போலீசார் தேடிவருகின்றனர்.


