/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூரில் தி.மு.க.,வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்அரியலூரில் தி.மு.க.,வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்
அரியலூரில் தி.மு.க.,வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்
அரியலூரில் தி.மு.க.,வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்
அரியலூரில் தி.மு.க.,வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்
ADDED : அக் 12, 2011 02:37 AM
அரியலூர்: அரியலூர் ஒன்றியத்தில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, மாவட்ட செயலாளர் சிவசங்கர் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அரியலூர் பஞ்.,யூனியனுக்குட்பட்ட, ஒன்றிய கவுன்சில் வார்டுகளில் போட்டியிடும் சந்திரா ஜோதிவேல் உள்ளிட்ட தி.மு.க., வேட்பாளர்கள், அரியலூர் தெற்கு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அறிவழகன் உள்ளிட்டோரை ஆதரித்து, தி.மு.க., மாவட்ட செயலாளர் சிவசங்கர், நேற்று தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார். அரியலூர் பஞ்.,யூனியனுக்குட்பட்ட அருங்கால், இடையத்தாங்குடி, ஏழேரி, வாழக்குழி, ஆலந்துறையார்கட்டளை, வல்லக்குளம், ஓரியூர், நானாங்கூர், ஆதனூர், பு.ஓட்டக்கோயில், சுண்டக்குடி, நாகமங்கலம், வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், மண்ணுழி, கடுகூர், கோப்ளியங்குடிக்காடு, ராயம்புரம், பொய்யாதநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் தெரு, தெருவாக சென்று, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசங்கர் ஓட்டு கேட்டார். பிரச்சாரத்தின் போது தி.மு.க., அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல், மாவட்ட பஞ்.,கவுன்சில் வேட்பாளர் அறிவழகன், தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும், கட்சியின் நகர செயலாளர் முருகேசன், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அமுதலெட்சுமி, மாரிமுத்து, மணிவண்ணன், ராமு, ஐயப்பன், விஜயலெட்சுமி செல்வராஜ், மாலா தமிழரசன், வக்கீல் முருகன், குணா, வேல், ராஜ்குமார், அமுதாமணி, லெட்சுமி, ராஜேந்திரன், சந்திரகலா திருஞானசம்பந்தம், விஜயா ராஜேந்திரன், பாபு, சரவணன் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து, நேற்று மாலை அரியலூர் நகரில் நடந்த, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசங்கர் பேசினார்.


