Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/உத்தமபாளையத்தை முதன்மை பேரூராட்சியாக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் மும்தாஜ்காசிம் வாக்குறுதி

உத்தமபாளையத்தை முதன்மை பேரூராட்சியாக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் மும்தாஜ்காசிம் வாக்குறுதி

உத்தமபாளையத்தை முதன்மை பேரூராட்சியாக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் மும்தாஜ்காசிம் வாக்குறுதி

உத்தமபாளையத்தை முதன்மை பேரூராட்சியாக்குவேன் : தி.மு.க., வேட்பாளர் மும்தாஜ்காசிம் வாக்குறுதி

ADDED : அக் 13, 2011 09:57 PM


Google News

உத்தமபாளையம் : உத்தமபாளையம் பேரூராட்சி தலைவருக்கான தி.மு.க., வேட்பாளராக மும்தாஜ்காசிம் போட்டியிடுகிறார்.

இவரது மாமனார் எஸ்.எம்.,சையதுமீரான், அவரது சகோதரர் சுல்த்தான்மைதீன், மாமியார் மெகர்நிஸா அடுத்தடுத்து 20 ஆண்டுகளாக பேரூராட்சி தலைவர்களாக இருந்து சிறந்த திட்டங்களை நிறைவேற்றி நகரை வளர்ச்சிபாதைக்கு கொண்டு சென்றனர். இவரது கணவர் முகமதுகாசிம் துணைத்தலைவராக இருந்து பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.4 கோடியே 10 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்துள்ளார். இப்பாரம்பரியம் மிக்க தி.மு.க., குடும்பத்திலிருந்து மும்தாஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் கூறியதாவது: மக்கள் எளிதில் அணுகி குறைகளை கூறும் விதத்தில் சிறந்த தூய்மையான நிர்வாகம், அனைத்து தரப்பினருக்கும் அனைத்தும் கிடைக்கும் படியான மக்கள் சேவையே முதல்பணி. குடிநீர் பிரச்னைக்கு, பற்றாக்குறை இல்லாத குடிநீர் சப்ளை ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காணப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் பொது குழாய், ஆழ்துளை போர் அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் அரசு மானியத்துடன் நிறைவேற்றப்படும். முக்கிய பகுதிகளிலும், விரிவாக்கப்பகுதிகளிலும் சாலை,வடிகால்,பாலம், தெருவிளக்குகள் மற்றும் மெயின் பஜார், தாமஸ்காலனியில் தார்ச்சாலை அமைக்கப்படும். அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் டாக்டர்கள் இருந்து அனைத்து சிகிச்சைகளும் செய்யவும், விபத்து காப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்து காலங்களில் மக்களின் துயர்துடைக்கும் வகையில், சையதுமீரான் நினைவு இலவச ஆம்புலன்ஸ் வசதி துவக்கப்படும். நகரில் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் ஊரின் வெளிப்பகுதிக்கு மாற்றப்படும். உத்தமபாளையத்தை அனைத்து துறையிலும் வளர்ச்சியடைந்த, மாநிலத்தின் முதன்மை நகராக மாற்றி சிறந்த மக்கள் பணிசெய்வதே எனது லட்சியம்,'என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us