/உள்ளூர் செய்திகள்/சென்னை/இழப்பீடு பெற்றுத்தராத பூந்தமல்லி தாசில்தார் அலுவலக கார்கள் ஜப்திஇழப்பீடு பெற்றுத்தராத பூந்தமல்லி தாசில்தார் அலுவலக கார்கள் ஜப்தி
இழப்பீடு பெற்றுத்தராத பூந்தமல்லி தாசில்தார் அலுவலக கார்கள் ஜப்தி
இழப்பீடு பெற்றுத்தராத பூந்தமல்லி தாசில்தார் அலுவலக கார்கள் ஜப்தி
இழப்பீடு பெற்றுத்தராத பூந்தமல்லி தாசில்தார் அலுவலக கார்கள் ஜப்தி
ADDED : ஜூலை 13, 2011 11:01 PM
பூந்தமல்லி: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தராததால், பூந்தமல்லி தாசில்தார் அலுவலக பொலிரோ கார்கள் ஜப்தி செய்யப்பட்டன.சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் முரளிமனோகரன்.
இவருக்கு சொந்தமாக, அம்பத்தூர் டன்லப் பகுதியில் உள்ள, 74 சென்ட் இடத்தை, 1987ல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது. அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை, அவருக்கு கொடுக்கவில்லை.இதையடுத்து, பூந்தமல்லி இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2002, டிச., 13ல், 40 லட்சத்து, 40 ஆயிரத்து, 322 ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையை, முரளிமனோகரனுக்கு, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் வழங்க உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.கடந்த, 2004ல், விரைவு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளையராணி, பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜப்தி செய்ய தீர்ப்பளித்தார்.இதையடுத்து, வழக்கறிஞர் அருண்குமார், அமீனா அறிவழகன் ஆகியோர், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு பொலிரோ கார்களை ஜப்தி செய்தனர்.


