ADDED : அக் 12, 2011 01:54 AM
குமாரபாளையம்: குமாரபாளைத்தில், தே.மு.தி.க., தலைவர் பிரச்சாரம்
மேற்கொள்ளாதது, அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் பதவிக்கு, தே.மு.தி.க., சார்பில் மாதேஸ்வரன்
போட்டியிடுகிறார். சேர்மன் வேட்பாளர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை
ஆதரித்து, கட்சித் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று
எதிர்பார்த்திருந்தனர்.நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு இடங்களில்
மட்டும் கட்சித் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். இது
குமாரபாளையம் நகர தே.மு.தி.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க., சார்பில் போட்டி வேட்பாளர் உள்ளதால்,
அக்கட்சியினர் ஓட்டு பிரிய வாய்ப்புள்ளது. கட்சித் தலைவர் விஜயகாந்த்
பிரச்சாரம் செய்திருந்தால், தே.மு.தி.க.,வுக்கு கூடுதல் பலம்
ஏற்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் இருந்தனர்.


