/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஓட்டிற்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை கலெக்டர் மணிமேகலை கடும் எச்சரிக்கைஓட்டிற்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை கலெக்டர் மணிமேகலை கடும் எச்சரிக்கை
ஓட்டிற்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை கலெக்டர் மணிமேகலை கடும் எச்சரிக்கை
ஓட்டிற்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை கலெக்டர் மணிமேகலை கடும் எச்சரிக்கை
ஓட்டிற்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை கலெக்டர் மணிமேகலை கடும் எச்சரிக்கை
ADDED : அக் 14, 2011 01:40 AM
விழுப்புரம் : ஓட்டளிக்க பணம் மற்றும் பரிசு வழங்குவோர் மீது நடவடிக்கை
எடுக்கப்படுமென கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் மணிமேகலை
விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 17, 19ம்
தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில்
விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. வாக்காளர்களுக்கு பணம்
மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பரிசு பொருட்கள் அரசு
கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஓட்டளிக்க பணம், பரிசு பொருட்கள்
பெறுவதும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும். பொது மக்கள் எச்சரிக்கையாக
இருந்து நீங்கள் விரும்பும் நபருக்கு எந்த பிரதி பல னும் எதிர்பாராமல் ஓட்
டளித்து ஜனநாயக கடமை நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் தேர்தல் அமைதியான
முறையில் எந்த பிரச்னையுமின்றி நடக்க பொது மக்களும், அரசியல் கட்சியினரும்
ஒத்துழைக்க வேண்டும்.


