/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
ADDED : ஜூலை 28, 2011 09:30 PM
வால்பாறை : வால்பாறை அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புக்களில் 1,736 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மதிவாணன் மாணவர்களுக்கு இலவச பஸ் பாசினை வழங்கினார். முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் இன்னும் ஒரு வாரத்தில் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


