ADDED : ஜூலை 12, 2011 05:14 PM

சென்னை: சர்.முத்த வெங்கடசுப்பா ராவ் அரங்கில் நடைபெற்ற ஜுகல்பந்தி நிகழ்ச்சியில் பம்பாய் ஜெயஸ்ரீ மற்றும் சுபா முத்கல் ஆகியோர் பங்கேற்றனர்.
சங்கல்ப் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சுபா முத்கலுக்கு அனீஸ் பிரதான் தபேலா வாசிக்க, சுதிர் நாயக் ஹார்மோனியம் இசைத்தார். பம்பாய் ஜெயஸ்ரீக்கு எம்பார் கண்ணன் வயலின் இசைக்க, பத்ரி சதீஷ் குமார் மிருதங்கம் வாசித்தார். கார்த்திகா வைத்தியநாதன் மற்றும் பூர்ணிமா சதீஷ் தம்பூரா வாசித்தனர்.


