மாணவியை கற்பழித்த வாலிபருக்கு சிறை
மாணவியை கற்பழித்த வாலிபருக்கு சிறை
மாணவியை கற்பழித்த வாலிபருக்கு சிறை
ADDED : ஜூலை 26, 2011 11:15 PM
சிவகங்கை:மாணவியை கற்பழித்த வீரணியை சேர்ந்த சரவணனுக்கு(29) 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.சிவகங்கை அருகேயுள்ள வீரணியை சேர்ந்த மாணவி நந்தினி(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
நாட்டரசன்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அதே ஊரை சேர்ந்தவர் சரவணன் (29). கடந்த 2004ம் ஆண்டு ஆக.,23ம் தேதி ஊரில் இருந்து நாட்டரசன்கோட்டைக்கு மாணவி சைக்கிளில் சென்றுள்ளார். சிவகங்கை ரோடு துணை மின் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் வந்த சரவணன், அருகிலுள்ள காட்டிற்குள் அழைத்து சென்று மாணவியை கற்பழித்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை, சிவகங்கை சப்- கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மாணவியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை,ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி, சார்பு நீதிபதி லட்சுமணன் தீர்ப்பளித்தார்.