/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மக்கள் முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கமாவேன் : தே.மு.தி.க., வேட்பாளர்மக்கள் முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கமாவேன் : தே.மு.தி.க., வேட்பாளர்
மக்கள் முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கமாவேன் : தே.மு.தி.க., வேட்பாளர்
மக்கள் முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கமாவேன் : தே.மு.தி.க., வேட்பாளர்
மக்கள் முன்னேற்றத்திற்கு கலங்கரை விளக்கமாவேன் : தே.மு.தி.க., வேட்பாளர்
ADDED : அக் 08, 2011 11:00 PM
காரைக்குடி : மக்களின் முன்னேற்றத்திற்கு 'கலங்கரை விளக்கமாக' இருந்து பாடுபடுவேன் என, சாக்கோட்டை ஒன்றிய (சங்கராபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 4வது வார்டு) கவுன்சிலர் பதவி தே.மு.தி.க., வேட்பாளர் வ.பெ.கனகராசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இப்பகுதி முழுவதும் சிமென்ட் சாலையாக மாற்றி விடுவேன் என சொல்லுவதை விட 'சேற்றிற்குள்ளும் சகதிக்குள்ளும், தேங்கி நிற்கும் மழை நீர்க்குள்ளும்' புழுக்களை போல வாழும் சமுதாய மக்களுக்கு சாதாரண தார்சாலை அமைக்க முதலில் முயற்சிப்பேன். விதவைகளுக்கும், நலிந்த பெண்களுக்கும் அரசின் மூலம் கிடைக்க கூடிய சலுகைகள் தடையின்றி கிடைக்க உதவி செய்வேன். இளைஞர்கள் அறிவு திறன் மென்மேலும் வளர நூலகம் இல்லாத பகுதிகளில் நூலகம் அமைத்து தரப்படும். மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, மின்விளக்கு, குடிநீர் இவைகள் செம்மையாக அமைய வழிவகை செய்வேன். ஓட்டுப்போடும் வாக்காளர்களுக்கு கலங்கரை விளக்காக இருந்து பாடுபடுவேன்'', என்றார்.


