Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தீபாவளி நெரிசலை சமாளிக்க கோயம்பேட்டில் அமைகிறது தனி டிப்போ

தீபாவளி நெரிசலை சமாளிக்க கோயம்பேட்டில் அமைகிறது தனி டிப்போ

தீபாவளி நெரிசலை சமாளிக்க கோயம்பேட்டில் அமைகிறது தனி டிப்போ

தீபாவளி நெரிசலை சமாளிக்க கோயம்பேட்டில் அமைகிறது தனி டிப்போ

ADDED : அக் 12, 2011 02:36 AM


Google News
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறையால், பஸ்களை நிறுத்துவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகையின் போது இயக்கப்படும் கூடுதல் சிறப்பு பஸ்களை நிறுத்த, தற்காலிக டிப்போ அமைக்கப்படுகிறது.

பகல் பொழுதில் நீண்ட நேரம் பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்கள், தற்காலிகமாக லாரி பார்க்கிங் செட்டில் நிறுத்தப்படவுள்ளன.ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் உச்சக்கட்டத்தில் இருக்கும். வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து கோட்டங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்கூடுதல் பஸ்கள் இயக்கம்:அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 456 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், கூடுதலாக மேலும் 200 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதே போல, விழுப்புரம் கோட்டத்தின் சார்பில், தீபாவளி முந்தைய நாட்களில் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 450 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல, கும்பகோணம் கோட்டத்தின் சார்பிலும் நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்களில் மட்டும், தமிழகத்தின் அனேக பகுதிகளுக்கு 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொதுவாக, நாள்தோறும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு 3,500 பஸ்கள் வந்து செல்கின்றன. 1,500 பஸ்களே வந்து செல்லும் வகையில் வசதியுள்ளதால், இடப்பற்றாக்குறையால் பஸ் நிலைய வளாகத்தில் எப்போதும் நெரிசல் இருக்கும். கூடுதல் நெரிசலாக, பஸ் நிலைய வளாகத்தில் நெடுந்தூரம் செல்லும் பஸ்கள் காலையில் இருந்து இரவு வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இரவு புறப்பட வேண்டிய பஸ்கள் பகல் பொழுதும் முழுவதும் பஸ் நிலைய வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்படுவதால், வளாக நெரிசல் தவிர்க்க முடியாத நிலையுள்ளது. இந்த சூழ்நிலையில் கூடுதலாக, 800 பஸ்களை பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்வது சாத்தியமில்லாதது.தீர்வு காண திடீர் சந்திப்பு:இந்நிலையில், தீபாவளி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், பஸ் நிலையத்தை பராமரித்து நிர்வகித்து வரும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகிய முத்தரப்பு அதிகாரிகள் நேற்று கோயம்பேட்டில் திடீர் சந்திப்பை நடத்தி ஆலோசித்தனர்.அப்போது பஸ் நிலைய வளாகத்தில், பகல் பொழுது முழுவதும் நிறுத்தி வைக்கப்படும் பஸ்களையும், குறிப்பாக ஆந்திரா, கர்நாடக பஸ்களையும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பின்புறம் குளிர்பதன கிடங்கு அருகே இருக்கும் லாரி பார்க்கிங் செட்டில் நிறுத்தலாம் என, முடிவு எடுத்துள்ளனர்.தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக டிப்போவாக, இந்த செட்டை பயன்படுத்தவுள்ளனர். மேலும், பஸ் நிலையத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஆகிய நடைபாதைகளில் இருந்து வெளியேறும் பஸ்கள் வழக்கம் போலவும், ஐந்து மற்றும் ஆறு நடைபாதைகளில் இருந்து வெளியேறும் பஸ்களை, நூறடி சாலையை ஒட்டியுள்ள வெளியேறும் வழியாகவும், இரு வழிகளில் பஸ்களை வெளியேற்றுவது எனவும் முடிவு எடுத்துள்ளனர்.இப்படி பஸ்களை இரு வழிகளில் வெளியேற்றுவதன் மூலம் பஸ் நிலைய வளாகத்தில் நெரிசலை ஓரளவு குறைக்க முடியும். இதே போல, லாரி பார்க்கிங் செட்டில் நிறுத்தப்பட்டிற்கும் பஸ்கள் புறப்படும் நேரத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, பஸ் நிலைய வளாகத்தில் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.ஆரம்பக்கட்ட ஆலோசனையில், தற்காலிகமாக ஒரு சில முடிவுகளை அதிகாரிகள் எடுத்துள்ள போதிலும், விரைவில் அடுத்தக்கட்ட ஆலோசனையில், போக்குவரத்து நெரிசலை தீர்க்க முழுமையாக செயல்திட்டம் வகுக்கப்பட்டு, கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் தீபாவளி நெரிசலை சமாளிப்போம் என, அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர்.

எஸ்.விவேக்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us