ADDED : ஆக 11, 2011 04:33 PM

வால்பாறை அடுத்துள்ள முடீஸ் நிதியுதவி பெறும் மத்திய நடுநிலைப்பள்ளியில் வரலாறு, தமிழ் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையில், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி துவக்கி வைத்தார்.வரலாறு கண்காட்சியில் பழங்கால நாணயங்கள்.
தபால்தலை, நினைவு சின்னங்கள் வைக்கப்பட்டிருந்தன. தமிழ் கண்காட்சியில் புறநானூறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை உள்ளிட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான படைப்புகளை பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மனோகர், யமுனா ஆகியோர் செய்திருந்தனர்.


