/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாற்றுத்திறனாளிகளுக்குவிழிப்புணர்வு பேரணிமாற்றுத்திறனாளிகளுக்குவிழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளிகளுக்குவிழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளிகளுக்குவிழிப்புணர்வு பேரணி
மாற்றுத்திறனாளிகளுக்குவிழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 28, 2011 01:06 AM
மோகனூர்: மோகனூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுத்திறன் கொண்ட
குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், சர்வீஸ் தொண்டு
நிறுவனத்தின் மூலம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கம் தலைமை வகித்து, பேரணியை துவக்கி
வைத்தார்.
வட்டார வளமையத்தில் இருந்து துவங்கிய பேரணி வளையப்பட்டி சாலை,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடைவீதி, அண்ணாதுரை சிலை, பஸ் ஸ்டாண்ட்,
உயர்நிலைப்பள்ளி சாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று
மீண்டும் பள்ளி முன் முடிந்தது.பேரணியில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை
பள்ளியில் சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர் பயிற்றுனர்கள் சரஸ்வதி,
லட்சுமி, லலிதா தேவி, புவனேஸ்வரி, தேன்மொழி, மாலதி, அனிதாகுமாரி,
செந்தில்குமரன், சந்திரசேகர், ஆசிரியர்கள் சுஜாதா, சங்கீதா, மாணவர்கள்
உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஆட்டோ மூலம் வாகன பிரச்சாரம்
மேற்கொள்ளப்பட்டது. வளையப்பட்டி, சர்க்கரை ஆலை, மணப்பள்ளி, கீழ் பாலப்பட்டி
வரை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், அனைவருக்கும்
கல்வி இயக்கம் மூலம் பயன்களை பெறவும் துண்டு பிரசுரம் வினியோகம்
செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்தனர்.