Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நஷ்டஈடு வழங்க உத்தரவு

நஷ்டஈடு வழங்க உத்தரவு

நஷ்டஈடு வழங்க உத்தரவு

நஷ்டஈடு வழங்க உத்தரவு

ADDED : ஜூலை 25, 2011 10:18 PM


Google News

விருதுநகர் : அரசு ப­ஸ்சில் பயணம் செய்து விபத்தில் சிக்கி இறந்தவர் குடும்பத்தாருக்கு, 2 லட்சத்து 28 ஆயிரத்தை வழங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விருதுநகர் கிளைக்கு கோர்ட் உத்தரவிட்டது.

சங்கரன் கோவில் தாலுகா வாகைக்குளத்தை சேர்ந்த வேதநாயகம் அரவது மகன் செல்வம் ஆகியோர் 2009 டிசம்பர், 9 ம் தேதி வாகைக்குளத்திலிருந்து கோவில்பட்டி வழியாக செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். பஸ், கழுகுமலை கம்மவர் பெண்கள் பள்ளி பஸ் ஸ்டாப்பில் நின்றது. பஸ்சிலிருந்து இறங்குவதற்கு முன்னால் பஸ் புறப்பட்டதில் வேதநாயகம் கீழே விழுந்து இறந்தார். இது தொடர்பான வழக்கில் வேதநாயகம் குடும்பத்தாருக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வழங்க, விருதுநகர் சப் கோர்ட் நீதிபதி ஏ. லியாகத் அலி உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us