/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்புவேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 23, 2011 11:43 PM
கடலூர் : மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள செயின்ட் கோபின், பெர்லோஸ் நிறுவனம் இணைந்து கடலூரில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்திருந்தது.
70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., முத்தையா முன்னிலை வகித்தார். முகாமை துவக்கி வைத்து கலெக்டர் அமுதவல்லி பேசுகையில், 'இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் வளம்பெற இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. வேலையளிப்போருக்கும், வேலைபெறுவோருக்கும் மாவட்ட நிர்வாகம் ஒரு பாலமாக பணியாற்றுகிறது. இதுபோன்ற முகாம்கள் தாலுகா அளவில் நடத்தப்பட்டு இளைஞர்கள் அதிக அளவில் பணிவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
சில தனியார் கம்பெனிகளில் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்பும் இளைஞர்களுக்கு வேலைகொடுக்க முன் வருவதில்லையே, என நிருபர்கள் கேட்டதற்கு, 'இது ஒரு பயிற்சி மாதிரி. இதில் இளைஞர்கள் விருப்பப்பட்டால் சேரலாம். இதில் எவ்வித கட்டாயமும் இல்லை' என்றார். வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் பேசுகையில், இந்த கம்பெனிகளில் சேரும் இளைஞர்களுக்கு 2 வேளை உணவு, தங்குமிடம் இலவசம். மாதம் 4,200 ரூபாய் சம்பளம். தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றினால் டிப்ளமோ இன் 'மேனுபேக்சரிங் டெக்னாலஜி' என்ற சான்றிதழ் வழங்கப்படும். திறமையுடைய இளைஞர்களுக்கு அதே கம்பெனியில் வேலைவாய்ப்பு வழங்கவும் தயாராக உள்ளனர். இடையில் நின்று விட்டவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காது' என்றார்.