/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அரசுப் பணிக்கு ஏங்கும் தனியார் கல்லூரி நர்ஸ்கள்அரசுப் பணிக்கு ஏங்கும் தனியார் கல்லூரி நர்ஸ்கள்
அரசுப் பணிக்கு ஏங்கும் தனியார் கல்லூரி நர்ஸ்கள்
அரசுப் பணிக்கு ஏங்கும் தனியார் கல்லூரி நர்ஸ்கள்
அரசுப் பணிக்கு ஏங்கும் தனியார் கல்லூரி நர்ஸ்கள்
ADDED : அக் 07, 2011 10:22 PM
திண்டுக்கல் : ''திறமையை நிரூபித்து, அரசு பணியில் சேர தயாராக இருக்கிறோம்,'' என, தனியார் கல்லூரியில் படித்த நர்ஸ்கள் சங்க மாநில தலைவர் செந்தில்நாதன் தெரிவித்தார்.
இச்சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் கருத்தரங்கு நடந்தது. மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டத்தினர் பங்கேற்றனர். மாநில தலைவர் செந்தில்நாதன் பேசியது: 1987 ஜூலைக்கு பின், தனியார் கல்லூரியில் படித்த நர்ஸ்களுக்கு, அரசுப்பணி வழங்கவில்லை. இதுவரை 38 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். அரசுப் பணி வழங்கவேண்டும் என, வழக்கு தொடர்ந்தோம். எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்,'' என, ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் மருத்துவ பணிகளுக்கு தனி தேர்வாணையம் உருவாக்கியது வரவேற்கத்தக்கது. இதற்கு முட்டுக்கட்டை போட சிலர் முயற்சிக்கின்றனர். தேர்வு நடத்தினால், நாங்கள் திறமையை நிரூபித்து, அரசுப் பணிக்கு செல்வோம், என்றார்.


