/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆழ்துளை அமைத்தும் குடிநீர் இன்றி தவிப்புஆழ்துளை அமைத்தும் குடிநீர் இன்றி தவிப்பு
ஆழ்துளை அமைத்தும் குடிநீர் இன்றி தவிப்பு
ஆழ்துளை அமைத்தும் குடிநீர் இன்றி தவிப்பு
ஆழ்துளை அமைத்தும் குடிநீர் இன்றி தவிப்பு
ADDED : அக் 08, 2011 10:50 PM
குஜிலியம்பாறை : கூம்பூர் ஊராட்சி மேட்டுப்பட்டியில், 80 வீடுகள் உள்ளன.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை தொட்டி, ஆழ்துளை அமைக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக போதிய நீர் இல்லாததால், மாவட்ட கவுன்சில் நிதியில் இருந்து, 3 லட்சம் செலவில், சின்னக்குளத்தில் ஆழ்துளை, குழாய் அமைக்கப்பட்டது. நான்கு மாதங்களாகியும், மின் இணைப்பு பெறுவது, மீட்டர் பொருத்துவது உள்ளிட்ட சிறு பணிகள் கிடப்பில் உள்ளன. இதனால் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். இது குறித்து ஊர் பிரமுகர் வி.எஸ்.கோபாலிடம் கேட்டபோது, ''மூன்று மாதங்களாக தண்ணீருக்கு சிரமப்படுகிறோம். உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. தேர்தலுக்காக ஓட்டு மட்டும் கேட்டு வருகின்றனர்,'' என்றார்.


