ADDED : செப் 16, 2011 12:47 AM
சங்கராபுரம்:கல்வராயன்மலை மண்டகபாடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை
திறப்பு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜி தலைமை தாங்கினார். அ.தி.மு.க.,
ஒன்றிய செயலாளர்கள் ஆப்பிள், அண்ணாமலை, கருப்பன் முன்னிலை வகித்தனர். அரசு
தலைமை கொறடா மோகன் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
சங்கராபுரம் தாசில்தார் கோகுலபத்மநாபன், வெள்ளிராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


