ADDED : ஜூலை 27, 2011 05:03 AM
மதுரை : பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மதுரை மாட்டுத்தாவணி அருகே கட்டப்படும் ஐகோர்ட் கிளை ஊழியர்கள் குடியிருப்பு பணியை ஆய்வு செய்தார்.
மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் அவரை சந்தித்தனர். மணல் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தினர். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.