/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒருவாரமாக ஆட்டோக்களில் மாமூல் வசூல் இல்லை : டிரைவர்கள் கூற்றால் போலீசார் பெருமிதம்ஒருவாரமாக ஆட்டோக்களில் மாமூல் வசூல் இல்லை : டிரைவர்கள் கூற்றால் போலீசார் பெருமிதம்
ஒருவாரமாக ஆட்டோக்களில் மாமூல் வசூல் இல்லை : டிரைவர்கள் கூற்றால் போலீசார் பெருமிதம்
ஒருவாரமாக ஆட்டோக்களில் மாமூல் வசூல் இல்லை : டிரைவர்கள் கூற்றால் போலீசார் பெருமிதம்
ஒருவாரமாக ஆட்டோக்களில் மாமூல் வசூல் இல்லை : டிரைவர்கள் கூற்றால் போலீசார் பெருமிதம்
ADDED : ஜூலை 27, 2011 05:24 AM
மதுரை : மதுரை நகரில் ஒருவாரமாக மாமூல் வசூலிக்காமல் உள்ளதாக ஆட்டோ டிரைவர்கள் கூறியதை கேட்டு போலீசார் பெருமிதம் கொண்டனர்.விதிமுறை மீறாமல் இருப்பது குறித்து ஆட்டோ டிரைவர்களிடம் போக்குவரத்து உதவிகமிஷனர்கள் மகுடபதி, எல்லப்பராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது 'போலீசாரால் மாமூல் பிரச்னை ஏதும் உள்ளதா' என்று கேட்க, 'இல்லை' என்ற டிரைவர்கள், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் ஆட்டோ ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின் போலீஸ் அதிகாரிகள் பேசியதாவது :டிரைவிங் லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே ஆட்டோ ஓட்ட வேண்டும். சீருடை அணிய வேண்டும். மதுபோதையில் ஓட்டக்கூடாது. அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது. பஸ் ஸ்டாப்களில் ஆட்டோவை நிறுத்தி ஆட்களை ஏற்றக்கூடாது. பஸ் ஸ்டாப்பிலிருந்து 200 அடிக்குள் முன்னும், பின்னும் ஆட்டோவை நிறுத்தி வைக்கக்கூடாது. 14வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 5 பேரை மட்டுமே ஆட்டோவில் ஏற்ற வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒருவழிப்பாதையில் செல்லக்கூடாது, என்றனர்.