/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/15 நாளுக்கு ஒரு முறை குடிநீர்:பொதுமக்கள் அவதி15 நாளுக்கு ஒரு முறை குடிநீர்:பொதுமக்கள் அவதி
15 நாளுக்கு ஒரு முறை குடிநீர்:பொதுமக்கள் அவதி
15 நாளுக்கு ஒரு முறை குடிநீர்:பொதுமக்கள் அவதி
15 நாளுக்கு ஒரு முறை குடிநீர்:பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 26, 2011 09:33 PM
குறிச்சி : குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தொடரும் குடிநீர் தட்டுப்பாடால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கோவை சுந்தராபும், குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு, குடிநீராக சிறுவாணி மற்றும் ஆழியாறு கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. துவக்கத்தில், நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என, தாமதமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து நகராட்சித் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், 'சிறுவாணி பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பே, தாமதத்துக்கு காரணம்,' என, குறிப்பிட்டிருந்தார். பின், குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டும், தற்போதும் பல இடங்களில், குடிநீர் வினியோகம் சீராகவில்லை. குறிப்பாக, சுந்தராபுரம் பகுதியிலுள்ள இந்திரா நகர், இந்திரா நகர் விரிவு பகுதியில், கடந்த ஒரு மாதத்தில், ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் நடந்து 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை குடிநீர் வரவில்லை. அதே நேரத்தில், அருகேயுள்ள குறிஞ்சி நகரில் இரண்டாவது முறையாக குடிநீர் வினியோகம் நடந்து விட்டது. இந்நிலை நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் காணப்படுகிறது.