/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வராக்கடன் சிறப்பு முகாம் ரூ. 7.45 லட்சம் வசூல்வராக்கடன் சிறப்பு முகாம் ரூ. 7.45 லட்சம் வசூல்
வராக்கடன் சிறப்பு முகாம் ரூ. 7.45 லட்சம் வசூல்
வராக்கடன் சிறப்பு முகாம் ரூ. 7.45 லட்சம் வசூல்
வராக்கடன் சிறப்பு முகாம் ரூ. 7.45 லட்சம் வசூல்
ADDED : ஜூலை 26, 2011 09:33 PM
காரமடை : ''தாயனூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நடந்த, வராக்கடன் சிறப்பு முகாமில், 7.45 லட்சம் ரூபாய் வசூலானது.
கடனை திருப்பிச் செலுத்தியவர்களுக்கு மீண்டும் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, வங்கி மேலாளர் ராமலிங்கம் தெரிவித்தார். காரமடையை அடுத்த தாயனூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஒருநாள் வராக்கடன் சிறப்பு வசூல் முகாம் நடந்தது. கிளை மேலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். காரமடை கிளை மேலாளர் அருணாசலம், விவேகானந்தபுரம் கிளை மேலாளர் மனோகரன், மண்டல அலுவலக முதன்மை மேலாளர் மணி வண்ணன், குமரவேல், மஞ்சு ஆகியோர் பேசினர். கிளை மேலாளர் ராமலிங்கம் கூறியதாவது: இவ்வங்கியில் நகைக்கடன், பயிர் கடன், விவசாய அபிவிருத்தி, ஆடு, மாடு வளர்ப்பு கடன், சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தல், டிராக்டர் வாங்க ஆகியவற்றுக்கு இதுவரை 17.89 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட் டுள்ளன. இதில் பல விவசாயிகள் சீரான முறையில் கடனை திருப்பி செலுத்தி வருகின்றனர். சில விவசாயிகள் 1.03 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தனர். இவர்களிடம் இருந்து கடனை வசூல் செய்ய வங்கியின் சார்பில் 'வராக்கடன் சிறப்பு வசூல் முகாம்' அமைக்கப் பட்டது. இதில் முழுத்தொகையும் செலுத்தியவர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு நாள் நடந்த முகாமில் 7.45 லட்சம் ரூபாய் வசூல் ஆனது. கடனை செலுத்தி கணக்கை முடிப்பவர்களுக்கு, மீண்டும் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. அதனால், இம்முகாம் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் இதே போன்று இரண்டு நாட்கள் வராக்கடன் வசூல் முகாம் நடத்த, கோவை மண்டல மேலா ளர் பாஸ்கரன் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு, மேலாளர் ராமலிங்கம் கூறினார்.